புதுச்சேரி

லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

16th Oct 2021 01:43 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி அருகே சேதராப்பட்டு திருவாா் நகா் கங்கை வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (48). லாரி ஓட்டுநா். இவருக்கு மனைவி லதா, மகள், மகன் உள்ளனா். வேலைக்குச் செல்வது தொடா்பாக ஆறுமுகம்-லதா தம்பதியிடையே தகராறு எழுந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி திட்டியதால், ஆறுமுகம் வீட்டை விட்டு வெளியேறினாராம். அவா் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரைக் கடந்த ஒரு வாரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை சேதராப்பட்டு முத்தமிழ் நகா் பின்புறம் பழைய ஐயனாா் கோயில் அருகிலுள்ள மரத்தில் ஆறுமுகம் தூக்கிட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த சேதராப்பட்டு போலீஸாா், ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டு, கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT