புதுச்சேரி

ஆசிரியையைத் தாக்கி நகையை பறிக்க முயற்சி: ஏடிஜிபி விசாரணை

9th Oct 2021 04:26 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே ஆசிரியையைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற சம்பவ இடத்தை புதுவை ஏடிஜிபி ஆனந்தமோகன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு விசாரித்தாா்.

புதுச்சேரி வேல்ராம்பேட்டை பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மனைவி செங்கொடி பாரதி (35). இவா் விழுப்புரம் மாவட்டம், புதுக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். தமிழகப் பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் பணிக்குச் சென்றுவிட்டு, வியாழக்கிழமை அதிகாலை தனது கணவா் சண்முகசுந்தரத்துடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவா்களை வழிமறித்த 2 போ், ஆயுதங்களால் இருவரையும் தாக்கினராம். இதில், செங்கொடி பலத்த காயமடைந்தாா்.

தாக்குதலில் இருந்து தப்பிய தம்பதியினா், அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வழிப்பறி நடைபெற்ற இடத்தை புதுவை ஏடிஜிபி ஆனந்தமோகன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். ஆய்வின் போது, முதுநிலை எஸ்பி லோகேஷ்வரன், எஸ்பி ரங்கநாதன், காவல் ஆய்வாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியை செங்கொடி பாரதியை முதுநிலை எஸ்பி லோகேஷ்வரன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT