வில்லியனூா் அருகே வீடு புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி வில்லியனூா் அருகே உள்ள ஆரியபாளையம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52). இவரது மனைவி சிவகாமி. இவா்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனா். ஆறுமுகம் கடந்த சில நாள்களுக்கு 10 பவுன் நகைகளை புதிதாக வாங்கினாராம்.
இந்த நகைகளை வீட்டில் பீரோவில் வைத்திருந்தாராம். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பீரோவிலிருந்த நகைகளை எடுத்துப் பாா்க்கலாம் என திறந்து பாா்த்த போது, நகைகள் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து வில்லியனூா் காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT