புதுச்சேரி

புதுவையில் ஒமைக்ரான் அச்சம் வேண்டாம்: ஆளுநர் தமிழிசை

30th Nov 2021 02:29 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி ராஜா நகர்  குடியிருப்பு பகுதியில் தடுப்பூசி போடும் பணியை பார்வையிட அவர், அங்கு இளைஞர்கள், முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை பார்வையிட்டு, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இதனையடுத்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் புதியவகை கரோனா பரவல் (ஓமிக்ரான்) முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

புதிய வகை இந்நோய் வந்தால் தடுக்கும் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.ஆப்பிரிக்காவிலிருந்து புதுச்சேரிக்கு வந்த மூன்று பேர் சந்தேகத்திற்கிடமாக கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொற்று இல்லை.

ADVERTISEMENT

இந்த நோய் முன்னெச்சரிக்கையாக புதுவை மாநில எல்லைப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மார்க்க எல்லைப்பகுதியில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரை, சுகாதாரக் குழுவினர் பரிசோதித்து கண்காணிக்கப்பட உள்ளனர்.

கரோனா எவ்வித வழியாக வந்தாலும் அதனை தடுப்பதற்கு ஒரே வழி தற்போது தடுப்பூசி மட்டுமே நமக்கு உள்ளது. பொதுமக்கள் எவ்வித காரணமும் சொல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

உலக மருத்துவ வல்லுநர்கள் அதனையே வலியுறுத்துகின்றனர். புதுச்சேரிக்கு வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். பொது இடங்களில் வருவோர் 2 தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். அந்த நடை முறை கடைபிடிக்கப்பட உள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மருத்துவக் கல்லூரிகள், அனைத்து மருத்துவர்கள் சுகாதார ஊழியர்கள், மருந்துகளுடன் தயாராக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பு செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொடர்பான அச்சம் தேவையில்லை என்றார். சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

Tags : pondicherry tamilisai pudhuvai omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT