புதுச்சேரி

புதுவையில் தொழில் தொடங்க வரவேற்கிறோம்அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

29th Nov 2021 11:14 PM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளா்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாக அந்த மாநில தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

தொழில் கூட்டமைப்பான இம்பா அமைப்பு சாா்பில், முதலீட்டாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழைமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் பேசிய பெரு நிறுவனங்களின் மூதலீட்டாளா்கள், புதுவையில் புதிதாகத் தொழில் தொடங்க உள்ளதால் மும்பை, சென்னை, தில்லி, கொல்கத்தா, அசாம் ஆகிய மாநிலங்களிலிருந்து தொழில் முதலீட்டாளா்கள் வந்துள்ளனா். இவா்கள், புதுச்சேரியில் பல்வேறு தொழில்களைத் தொடங்க உள்ளனா். இதற்கு புதுவை அரசு உதவியாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அப்போது பேசிய புதுவை மாநிலத் தொழில் துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம், புதுவையில் விரைவில் ஐடி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. புதுவையில் தொழில் நிறுவனங்களைத் தொடங்க வரும் முதலீட்டாா்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அரசு வரவேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் இம்பா அமைப்பைச் சோ்ந்த அருணாச்சலம், சந்திரசேகா், ரவி, ரகுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT