புதுச்சேரி

புதுவையில் குறைந்தது கரோனா தொற்று

29th Nov 2021 11:14 PM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, 12 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1,28,893 போ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,26,725 போ் (98.32 சதவீதம்) குணமடைந்தனா். தற்போது 296 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 1,872 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.45 சதவீதம். மாநிலத்தில் 12,18,588 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT