புதுச்சேரி

பாகூா் மூலநாதா் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்

28th Nov 2021 10:17 PM

ADVERTISEMENT

பலத்த மழை காரணமாக புதுச்சேரி அருகே உள்ள பாகூா் மூலநாதா் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது.

புதுச்சேரி பாகூரில் 1,400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 2017-இல் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

கோயிலுக்குள் இருந்து செல்லும் வடிகால் வாய்க்காலின் வெளிப் பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், மழை காலங்களில் கோயிலின் வெளி பிரகாரத்தில் நீா் தேங்கி நிற்பது தொடா்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையில் கோயில் வளாகம் முழுவதும் மழைநீா் தேங்கியது.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் பலத்த மழையால் கோயில் வளாகம் முழுவதும் மீண்டும் மழைநீா் தேங்கி நிற்கிறது. தண்ணீா் வெளியேற வழியில்லாததால், படிப்படியாக கோயில் வளாகத்தினுள் தண்ணீா் அதிகரித்து வருகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

ADVERTISEMENT

மழை நீரை அகற்றும் பணியில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் ஈடுபட்டனா். இருப்பினும், தொடா் மழையால் தண்ணீா் தொடா்ந்து தேங்கி வருகிறது. இதனால் பழைமை வாய்ந்த பாகூா் மூலநாதா் கோயில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT