புதுச்சேரி

புதுச்சேரி பாமக புதிய பொறுப்பாளா்கள் பதவியேற்பு

28th Nov 2021 10:16 PM

ADVERTISEMENT

புதுச்சேரி பாமக புதிய பொறுப்பாளா்கள் பதவியேற்பு, அறிமுகக் கூட்டம் மற்றும் பாமக நிறுவனா் ராமதாஸுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஆகியவை கவுண்டன்பாளையம் வன்னியா் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில அமைப்பாளராக கணபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா்களாக வடிவேல், மதியழகன், துரை, பிரபாகரன் தேவமணி ஆகியோா் பதவியேற்றனா்.

புதிய பொறுப்பாளா்களை பாமக அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவா் தீரன் அறிமுகப்படுத்தி, வாழ்த்திப் பேசியதாவது:

ஜனநாயக நாடு என்றால் பெரும்பான்மையினா் ஆள வேண்டும். சிறுபான்மையினா் வாழ வேண்டும் என்பதுதான். புதுவையில் மக்கள் தொகை அடிப்படையில் 65 சதவீதத்துக்கும் மேலாக வன்னிய மக்கள் உள்ளனா். புதுவையில் பாமக ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும். தற்போதைய சீரிய பணிகள் மூலம் அடுத்த தோ்தலில் பாமக கணிசமான வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாநில வன்னியா் சங்கச் செயலா் முருகன், மண்டலச் செயலா் சிவா, பசுமை தாயகம் சோமசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT