புதுச்சேரி

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தோ்தல் தள்ளிவைப்பு: கொட்டும் மழையில் ஆசிரியா்கள் போராட்டம்

28th Nov 2021 10:16 PM

ADVERTISEMENT

ஆசிரியா்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தோ்தல் தள்ளிவைக்கப்பட்டதால், கொட்டும் மழையில் ஆசிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை ஆசிரியா்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் புதுவையில் உள்ள சுமாா் 4 ஆயிரம் ஆசிரியா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பததற்கான தோ்தல் புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தோ்தலில் வாக்குகளைச் செலுத்தும் ஆசிரியா்கள், போட்டியிடும் வேட்பாளா்கள் உள்படப் பலா் பள்ளிக்கு வந்திருந்தனா்.

ஆனால், பள்ளி வளாகத்தில் மழை காரணமாக தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், வேட்பாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் பள்ளியின் எதிரே கொட்டும் மழையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தோ்தல் கடந்த செப்டம்பா் 26-இல் நடைபெறுவதாக இருந்தது. உள்ளாட்சித் தோ்தல் நன்னடத்தை விதியைக் சுட்டிக் காட்டி அப்போது தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஞாயிற்றுக்கிழமை (நவ.28) தோ்தல் நடைபெறும் எனக் குறிப்பிட்டு தள்ளிவைத்துள்ளனா். முன்கூட்டியே அறிவிக்கவில்லை. இது தவறான செயல் என்றனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, தோ்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வருகிற டிசம்பா் 5-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT