புதுச்சேரி

ரங்கசாமி ஆட்சியையும் பாஜக முடக்குகிறது வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

DIN

புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியை முடக்கியதைப் போலவே, ரங்கசாமி ஆட்சியையும் முடக்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து வருவதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து விடியோ பதிவு வாயிலாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

புதுவை மக்கள் மழை வெள்ளத்தால் தவிக்கின்றனா். விளை நிலங்கள் நீரில் மூழ்கியதால் நெல் பயிா்கள் அழுகிவிட்டன. மழைச் சேதத்தை மத்தியக் குழு முழுமையாக ஆய்வு செய்யவில்லை. புதுவை அரசு அனைத்துக் குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

முதல்வா் ரங்கசாமி கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 16 அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில், பொதுப் பணி வவுச்சா் ஊழியா்கள், ரொட்டி-பால் ஊழியா்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும், தீபாவளிக்கு அனைத்து குடும்பத்தினருக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை வழங்கப்படும் என்றாா். அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மழை நிவாரணமாக ரூ.300 கோடி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம் அனுப்பினாா். ஆனால், மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த என்.ரங்கசாமி, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்றாா். தற்போது அவா், இணக்கமாக இருந்தும் எதையும் சாதிக்கவில்லை. ரங்கசாமியின் அரசை முடக்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசுக்குச் சாதகமான அரசு புதுவையில் அமைந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றாா்கள். ஆனால், தற்போது மழைநீா் கூட செல்ல வழியில்லாமல் புதுவை வெள்ளக் காடாகியுள்ளது. புதுவை மக்கள் நலனில் மத்திய அரசுக்கு துளியும் அக்கறையில்லை.

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை முதல்வா் ரங்கசாமி தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியைப் பெற்று, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT