புதுச்சேரி

மருத்துவ மாணவா் சோ்க்கையில் பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தல்

DIN

புதுவை மாநிலத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் பிராந்திய இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கையை நடத்த வேண்டுமென புதுவை மாநில மாணவா்- பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவா் வை.பாலா அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் உள்ள 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 450 மருத்துவ இடங்களில் 170 இடங்கள் அரசு ஒதுக்கீடாகப் பெறப்படுகிறது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் 131 இடங்கள் என மொத்தம் 301 இடங்களுக்கு புதுவை சென்டாக் மூலம் சோ்க்கை நடத்தப்படவுள்ளன. இதேபோல, அரசு மற்றும் தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் 99 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த இடங்களில் பிராந்திய இட ஒதுக்கீட்டு முறையால், புதுச்சேரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் சேர முடியவில்லை. நீட் தோ்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் புதுச்சேரி மாணவா்களால் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மற்ற பிராந்திய மாணவா்கள் ஒதுக்கீட்டு முறையில் இடம் கிடைக்கப் பெறுகின்றனா்.

எனவே, நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த புதுவை அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை புதுச்சேரி பிராந்தியத்தைச் சோ்ந்த 23 எம்எல்ஏக்களும் வலியுறுத்த வேண்டும்.

நாட்டில் எந்த மாநிலமும் பின்பற்றாத பிராந்திய இட ஒதுக்கீட்டு முறையை புதுவை அரசு ரத்து செய்ய வேண்டும். நிகழாண்டு அனைத்துப் பாடப் பிரிவுக்கான அரசு, நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT