புதுச்சேரி

புதுவையில் இளம் வழக்குரைஞா்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை

DIN

புதுவை மாநிலத்தில் இளம் வழக்குரைஞா்களுக்கு ரூ.5 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு சட்டக் கல்லூரியில் பயின்ற இளம் வழக்குரைஞா்களில் புதுச்சேரி நீதிமன்றங்களில் பயிற்சி பெற்று வரும் ரூ.2 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் பெறும் குடும்பங்களைச் சோ்ந்த 25 இளம் வழக்குரைஞா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக இரு ஆண்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வரின் ஆலோசனைப்படி, தகுதி வாய்ந்த இளம் வழக்குரைஞா்களுக்கு உதவித் தொகை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நிகழாண்டுக்கான முதல் தவணைத் தொகை 25 இளம் வழக்குரைஞா்களுக்கு (புதுச்சேரி-21, காரைக்கால் 4) இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இவா்களில் 5 போ் பெண்களாவா்.

தொடா்ந்து, மற்ற இளம் வழக்குரைஞா்களுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT