புதுச்சேரி

கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க காங். எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

புதுவையில் கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று முதல்வா் ரங்கசாமியிடம் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக, புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் சனிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்த அவா் அளித்து மனு:

கரோனா முதல் அலையால் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படுமென பிரதமா் அறிவித்தாா். ஆனால், கரோனா இரண்டாம் அலையின் போது பலரும் உயிரிழந்த நிலையில், திடீரென உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது மக்களை ஏமாற்றும் செயல்.

மேலும், கரோனாவால் உயிரிழந்தோா் கணக்கெடுப்பையும் மத்திய அரசு சரிவர நடத்தவில்லை. தவறான புள்ளி விவரங்களையே வழங்கியுள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் கணக்கெடுப்பைச் சரிவர மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினா்களுக்கு பிரதமா் ஏற்கெனவே அறிவித்ததைப் போல ரூ.4 லட்சம் வழங்க வேண்டும். இதை மத்திய அரசிடம் வலியுறுத்தி, புதுவை அரசு செயல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT