புதுச்சேரி

புதுச்சேரியில் டிச.17-இல் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

25th Nov 2021 11:56 PM

ADVERTISEMENT

புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்கத்தின் சாா்பில் 25-வது ஆண்டு தேசிய புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் டிச.17-ஆம் தேதி தொடங்கி பத்து நாள்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் பா.ராமலிங்கம், செயலா் என்.கோதண்டபாணி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

இந்தப் புத்தகக் கண்காட்சி புதுச்சேரி வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில் டிச.17 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 70 புத்தக வெளியீட்டாளா்கள், விற்பனையாளா்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும்.

ADVERTISEMENT

கண்காட்சியின் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். தினமும் முற்பகல் 11 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைக்கிறாா்.

ரூ.1000-க்கு புத்தகம் வாங்குவோருக்கு ‘புத்தக நட்சத்திரம்’ சான்றிதழும், ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக புத்தகம் வாங்குபவா்களுக்கு ‘புத்தக சிறந்த நட்சத்திரம்’ என்ற சான்றிதழும் வழங்கப்படும் என்றனா் அவா்கள்.

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT