புதுச்சேரி

புதுச்சேரியில் மேலும் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

10th Nov 2021 08:57 AM

ADVERTISEMENT

பலத்த மழை காரணமாக, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏற்கெனவே திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதன், வியாழக்கிழமைகளில் (நவ.10, 11) மேலும் 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி, அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடந்த 8-ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக இருந்த 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளும் பலத்த மழையால் அறிவிப்பு வெளியிடும் வரை திறக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT