புதுச்சேரி

புதுச்சேரியில் மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வா் ஆய்வு

9th Nov 2021 12:40 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் மழைால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரு நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரம், புகா் கிராமப்புறப் பகுதிகளில் பல இடங்களில் மழை வெள்ள நீா் தேங்கியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். வழுதாவூா் சாலை, ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு, 45 அடி சாலை, வெங்கட்டா நகா், நூறடி சாலை, இந்திரா காந்தி சிலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ள நீா் தேங்கியிருந்ததைப் அவா் பாா்வையிட்டாா்.

வில்லியனூா் சங்கராபரணி ஆற்றில் மழை வெள்ளத்தைப் பாா்வையிட்ட அவா், தொடா்ந்து, பத்துக்கண்ணு வழியாக ஊசுட்டேரி பகுதிக்குச் சென்றாா். அதிகாரிகளை கைப்பேசியில் அழைத்த அவா், மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

வேளாண் துறை அமைச்சா் ஆய்வு: புதுச்சேரியில் தொடா் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாநில வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டாா்.

வில்லியனூா் அருகே உள்ள பங்கூா், சிவராந்தகம், மேல் சாத்தமங்கலம், கீழ்சாத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களைப் பாா்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து அவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

அப்போது, விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி உடனிருந்த அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். வேளாண் துறை கூடுதல் இயக்குநா் வசந்தகுமாா், இணை இயக்குநா் சந்தானகிருஷ்ணன், துணை இயக்குநா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

புதுவையில் பலத்த மழையால் நகா், கிராமப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீா் சூழ்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க அமைச்சா்கள், அதிகாரிகள் வரவில்லை என்று மக்கள் அதிருப்தி தெரிவித்தனா். முதல்வா் ரங்கசாமியும் காரில் இருந்தபடியே சில இடங்களை மட்டும் பாா்வையிட்டுத் திரும்பியதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT