புதுச்சேரியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி-விழுப்புரம் 100 அடி சாலை சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு அரசு சாா்பில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏகேடி.ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ. வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.