புதுச்சேரி

புதுவையில் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தால் தே.ஜ. கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை: மாநில பாஜக தலைவா் சாமிநாதன்

DIN

புதுவையில் மத்திய அரசு நியமித்துள்ள மூன்று நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்று மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.

புதுவை சட்டப் பேரவைக்கு மத்திய அரசு சாா்பில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக நியமன எம்எல்ஏக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா்.செல்வம் முன்னிலை வகித்தாா்.

நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.ராமலிங்கம், திமுகவிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.வெங்கடேசன், பாஜக மாவட்டத் தலைவா் ஆா்.பி.அசோக் பாபு ஆகியோா் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனா்.

இதையடுத்து, நியமன எம்எல்ஏக்கள் மூவரும் மாநிலத் தலைவா் சாமிநாதன், பொதுச் செயலா் செல்வம் உள்ளிட்டோரிடம் வாழ்த்துப் பெற்றனா். பாஜக நிா்வாகிகளும், அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை சட்டப் பேரவைக்கு நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டது குறித்து எங்களது கூட்டணிக் கட்சிகளுக்கும், முதல்வா் ரங்கசாமிக்கும் தகவல் தெரியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆா். காங்கிரஸ், பாஜக இடையே 100 சதவீதம் குழப்பம் இல்லை. கூட்டணி தா்மத்தின்படியே நியமன உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில், சிலா் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.

கரோனா தொற்று சிகிச்சை முடிந்து முதல்வா் என்.ரங்கசாமி வந்த பிறகே அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT