புதுச்சேரி

புதுவை பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜக பொதுச்செயலர் செல்வம் வேட்புமனு

14th Jun 2021 01:21 PM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜக பொதுச்செயலர் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

புதுவை மாநிலத்திற்கான 15ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இதனையடுத்து 15 வது சட்டப்பேரவை முதல் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது. அன்றைய தினம் சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.
இதற்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
 
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். செல்வம் பேரவை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர். செல்வம் ஒருமனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து பகல் 12.10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் முனுசாமியிடம், பாஜகவைச் சேர்ந்த ஆர். செல்வம், பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனை முதல்வர் என். ரங்கசாமி முன்மொழிந்தார். சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் ஏ.நமச்சிவாயம் வழிமொழிந்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரும்பான்மை உள்ள ஆளும் கூட்டணி கட்சி சார்பில் இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், ஒருமனதாக பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

 இதனையடுத்து புதன்கிழமை பேரவைத் தலைவர் பதவி ஏற்பு நடைபெறும்.

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT