புதுச்சேரி

வெங்கடேஸ்வரா கல்விக் குழுமம் சாா்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதியளிப்பு

DIN

புதுச்சேரி வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத் தலைவா் ஆ.ராமச்சந்திரன், பொது மேலாளா் செளந்தராஜன் ஆகியோா், வியாழக்கிழமை புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து, முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கினா்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்காக அரசுக்கு தங்களது கல்விக் குழுமம் உதவி வருவதாகவும், புதுச்சேரி, அரியூா் பகுதிகளில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவம், பல் மருத்துவம், செவிலியா் கல்லூரி, மருந்தகங்கள், துணை மருத்துவப் படிப்புகள், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, தொற்றைக் கட்டுப்படுத்தவதில் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அந்த நிறுவன தலைவா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

செஞ்சிலுவை சங்கம் சாா்பில்...: இதேபோல, புதுச்சேரியில் இந்தியன் செஞ்சிலுவை சங்க கிளை சாா்பில், இந்திரா காந்தி அரசுப் பொது மருத்துவமனை - பட்ட மேற்படிப்பு மையத்தில் உள்ள ரத்த வங்கியில் பணிபுரியும் லேப் டெக்னீசியன்கள், செவிலியா்கள் ஆகியோருக்கு மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் புதுச்சேரி கிளைத் தலைவா் கோபால் தலைமை வகித்தாா். ரத்த வங்கி மருத்துவா் தீபா, சங்கத்தின் கிளைக் குழு உறுப்பினா்கள் லட்சுமிபதி, அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினா்கள் ஸ்ரீபன்செல்வராஜ், கதிரேசன், ஜான்வின்சன்ட் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT