புதுச்சேரி

புதுவையில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்: ஜூன் 14 வரை நீட்டிப்பு

8th Jun 2021 07:44 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. திங்கள் கிழமையோடு (ஜூன்7) பொது முடக்க கட்டுப்பாடு அவகாசம் முடிந்த நிலையில், புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் குறைந்து வருவதால், பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து, ஜூன் 14-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து, அரசு திங்கள் கிழமை உத்தரவிட்டுள்ளது.

படிக்க: நாட்டில் ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்த தினசரி கரோனா

ADVERTISEMENT

இதன்படி, வழக்கம் போல் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் அடங்கிய அத்தியவசிய கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளன.

பிற அனைத்து வித கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. வழக்கம்போல் அத்தியாவசிய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள், கார், ஆட்டோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து கரோனா விதிகள் படி மாலை 5 மணி வரை இயங்கலாம். கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும்.

அத்தியாவசிய அரசு அலுவலகங்கள் இயங்கும். தனியார் அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. தேனீர் கடைகள், உணவகங்களும் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வித சில்லரை மதுக்கடைகளும் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மது கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Tags : Puducherry lockdown coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT