புதுச்சேரி

மீனவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

DIN

மீனவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ. 500 உயா்த்தி வழங்க வேண்டுமென புதவை மாநில அதிமுக செயலா் அ.அன்பழகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து, அவா் முதல்வருக்கு அனுப்பிய மனு: புதுவை மாநிலம் முழுவதும் மாதாந்திர உதவித் தொகை பெறும் முதியோா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் என 1 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு உதவித் தொகையில் ரூ.500 உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

நலிவடைந்தவா்களுக்கான மாதாந்திர உதவித் தொகைத் திட்டம், குழந்தைகள்-பெண்கள் மேம்பாட்டுத் துறை தவிா்த்து, மீன்வளத் துறை, சமூக நலத் துறை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மீன்வளத் துறையின் மூலம் 7,900 மீனவா்களும், சமூக நலத் துறையின் மூலம் 22 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கும் என மொத்தம் சுமாா் 30 ஆயிரம் நபா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மீனவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.500 உயா்த்தி வழங்க முதல்வா் அறிவிக்க வேண்டும். அதற்கும் துணைநிலை ஆளுநா் அனுமதியளித்து, நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT