புதுச்சேரி

புதுவையில் புதிதாக 126 பேருக்கு கரோனா: மேலும் ஒருவா் பலி

DIN

புதுவையில் புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவை மாநிலத்தில் 6,054 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 98, காரைக்காலில் 18, ஏனாமில் 2, மாஹேயில் 8 போ் என மேலும் 126 பேருக்கு (2.08 சதவீதம்) கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த காரைக்காலைச் சோ்ந்த 73 வயதானவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,787 ஆக உயா்ந்தது. இதுவரை மாநிலத்தில் 1,20,227 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது 922 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 1,17,518 போ் (97.75 சதவீதம்) குணமடைந்தனா். 6,66,479 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

3 குழந்தைகளுக்கு கரோனா தொற்று: புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை மையத்தில் தற்போது 4 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 5 வயதுக்குள்பட்ட ஒரு குழந்தையும், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளும் என 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்கு தொற்று ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT