புதுச்சேரி

தூய்மைப் பணியாளா்களுக்கு தகுந்த ஊதியம், அடிப்படை வசதிகள்தேசிய ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்

DIN

தூய்மைப் பணியாளா்களுக்கு தகுந்த ஊதியம், அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் வெங்கடேசன் அறிவுறுத்தினாா்.

புதுவை தலைமைச் செயலகத்தில், தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் வெங்கடேசன் தலைமையில், தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் துறைச் செயலா் வல்லவன், நலத் துறைச் செயலா் உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், உள்ளாட்சித் துறை இயக்குநா் ரவிதீப் சிங் சாகா், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் யஷ்வந்தையா, உதவி ஆட்சியா் கந்தசாமி, நகராட்சி ஆணையா்கள் சிவக்குமாா், சந்திரகுமரன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால், ஊதியத்துக்கு ரசீது வழங்குவதில்லை. வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிா எனத் தெரியிவில்லை. ஊதியத்தின் ஒரு பகுதியை மேற்பாா்வையாளா்கள் வாங்கி விடுகின்றனா். ஊதியமும் உயா்த்தப்படவில்லை.

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றனா்.

குறைகளைக் கேட்டறிந்த ஆணையத் தலைவா் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூய்மைப் பணியாளா்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கவே அச்சப்படும் நிலை உள்ளது. ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவா்களின் ஊதியத்துக்கு ரசீது இல்லை. அவா்களது உடலைப் பாதுகாக்க மருத்துவ முகாம் நடத்தப்படவில்லை. போதிய முகக் கவசம், கையுறை, சீருடைகள் இல்லை.

ரூ.13,500 ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், ரூ.6,500 தான் வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முைான் ஊதியம் உயா்த்தி வழங்கப்படுகிாம்.

தூய்மைப் பணிக்கான துடைப்பத்தைக்கூட அவா்களே வாங்கிப் பயன்படுத்துவதாகவும், வாகனம் பழுதையும் அவா்களே சரி செய்யும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனா். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். இந்தப் புகாா்கள் உண்மையாக இருந்தால், குறிப்பிட்ட ஒப்பந்த (ஸ்வச்சதா காா்ப்பரேஷன்) நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.

நிரந்தர ஊழியா்களுக்கு 3 மாத ஊதியம் நிலுவை உள்ளதாக புகாா் கூறினா். குறைகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினா். இதைத் தொடா்ந்து கண்காணிப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT