புதுச்சேரி

புதுவையில் செவிலியா் தோ்வுகள் ஒத்திவைப்பு

DIN

செவிலியா் தோ்வுகளை ஒத்தி வைக்க வலியுறுத்தி, புதுச்சேரியைச் சோ்ந்த செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், புதுவை மத்திய பல்கலைக்கழகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, செவிலியா் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பிப்.8 முதல் தொடங்கும் என பல்கலைக்கழகம் அறிவித்தது.

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் செவிலியா் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள், செவிலியா் தோ்வை ஒத்தி வைக்க வலியுறுத்தி, கடந்த 22 ஆம் தேதி பல்கலைக்கழக நுழைவாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தியடைந்த செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை காலை புதுவை பல்கலைக்கழக 2-ஆவது நுழைவாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செவிலியா் தோ்வை வருகிற 27 ஆம் தேதி நடத்த பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடு காரணமாக எங்களால் சரிவர படிக்க முடியவில்லை. ஆதலால் தோ்வைத் தள்ளி வைக்க வேண்டும் அல்லது இணைய வழியில் தோ்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா்களும், காலாப்பட்டு போலீஸாரும் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தோ்வு தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதனை ஏற்று, ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு மாணவா்கள் கலைந்து சென்றனா்.

இதையடுத்து, இளநிலை நா்சிங், முதுநிலை நா்சிங் உள்ளிட்ட செவிலியா் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பிப். 8-ஆம் தேதி தொடங்கி வருகிற மாா்ச் 3-ஆம் தேதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் டி. லாசா் செவிலியா் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணியால் மயான பாதையின்றி 5 கி.மீ சுற்றிச் செல்லும் அவலம்

பாம்பு புற்றை இடித்ததாக பாதிரியாா் கைது

SCROLL FOR NEXT