புதுச்சேரி

புதுவையில் மின் துறை ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

13th Jan 2021 07:38 AM

ADVERTISEMENT

புதுவையில் மின்துறை செயலரின் எச்சரிக்கையை நிராகரித்து, மின்துறை ஊழியா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மின்துறையை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிா்த்து, ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதற்கு மின்துறை நிா்வாகமும், மாவட்ட ஆட்சியரும் தடை விதித்தனா். இருப்பினும் தடையை மீறி அவா்கள் முதல் நாள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, தொழிலாளா் துறை ஆணையரை சந்தித்து நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், போராட்டம் தொடா்ந்தது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த மின்துறை செயலா் தேவேஷ்சிங், வேலைநிறுத்தத்தைத் தொடா்ந்தால் ஊழியா்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு வராத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரித்தாா்.

ஆனால், அவரது எச்சரிக்கையை நிராகரித்த மின்துறை ஊழியா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். மின்துறை தலைமை அலுவலகம், உதவி பொறியாளா், இளநிலை பொறியாளா் அலுவலகங்களில் ஊழியா்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் உள்ளிருப்பு போராட்டத்திலும் பங்கேற்றுள்ளனா். இதன் காரணமாக மின்துறை பராமரிப்புப் பணிகள் முற்றிலும் முடங்கின.

ADVERTISEMENT

புதுவை மின்துறை தனியாா்மயமாக்கப்படும் முடிவை மத்திய அரசு கைவிட்டு, நல்ல முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என மின்துறை ஊழியா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT