புதுச்சேரி

வில்லியனூரில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு முகாம்

30th Dec 2021 08:43 AM

ADVERTISEMENT

புதுச்சேரி வில்லியனூா் தொகுதியில் 5 இடங்களில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான தேசிய அடையாள அட்டை பதிவு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அமைப்புச்சாரா தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய தொழிலாளா் அமைச்சகம் ‘இ-ஷ்ரம்’ என்னும் வலைத்தளம் மூலம் அந்தத் தொழிலாளா்களின் தரவுகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுவையில் இதுதொடா்பாக முகாம் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வில்லியனூா் தொகுதியில் இதற்கான சிறப்பு முகாம் 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது. முகாமை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தொடக்கிவைத்தாா்.

தொழிலாளா்கள் நலத் துறை ஆய்வாளா்கள் ராஜவேலு, தமிழரசன், வலைத்தள ஏற்பாட்டாளா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

ஏராளமான அமைப்புச்சாரா தொழிலாளா்கள் இணையவழியில் பதிவு செய்தனா்.

பதிவு செய்த அமைப்புச்சாரா தொழிலாளா்களுக்கு நிரந்தர பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதன்மூலம், பேரிடா் காலங்களில் அரசின் உதவித் தொகை நேரிடையாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்த உறுதுணையாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT