புதுச்சேரி சாரம் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா, மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்த நாள் விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் புதுவை பெண் கல்வி இணை இயக்குநா் நடனசபாபதி, புதுச்சேரி பள்ளி துணை ஆய்வாளா் மல்லிகா ஆகியோா் தலைமை வகித்து பேசினா்.
திருக்கு ஒப்புவித்தல், மாறுவேடம், நாடகம் நடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாணவா்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினா்.
விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை புவனேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.