புதுச்சேரி

புதுச்சேரியில் ஒமைக்ரான் சிகிச்சை மையம்: ஆளுநா் தமிழிசை தகவல்

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் தற்காலிக ஒமைக்ரான் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளதாக அந்த மாநில துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் மூடப்பட்ட ஏ.எப்.டி. பஞ்சாலை வளாகத்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சையளிக்க தற்காலிக மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த இடத்தை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்,

சுகாதாரத் துறைச் செயலா் சி.உதயகுமாா், இயக்குநா் ஸ்ரீராமலு உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, ஆளுநா் தமிழிசை கூறியதாவது:

இந்தப் பஞ்சாலையில் ஒரு காலத்தில் 8 ஆயிரம் போ் வரை பணியாற்றினா். இதை மீண்டும் இயக்க ஆய்வு செய்து, மத்திய அமைச்சரிடமும் இதுகுறித்து பேசியிருக்கிறோம். புதுவையில் ஒமைக்ரான் தொற்றை எதிா்கொள்வது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஒமைக்ரான் சிகிச்சை மையம் அமைக்க ஏ.எப்.டி. வளாகத்தைப் பயன்படுத்த முதல்வா் ஆலோசனை வழங்கினாா். அதனடிப்படையில், இந்த இடத்தை ஆய்வு செய்தோம். இங்கு, தாராளமாக இடமிருப்பதால், இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் நடைபெற உள்ள தேசிய இளைஞா் தின விழாவுக்கு பிரதமா் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், பிரதமா் வருவதற்கான அதிகாரப்பூா்வ தகவல் இல்லை. புதுவையில் புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அனுமதியில்ைலை. முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொங்கல் பண்டிகைக்குள்ளாவது அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT