தடை ஆணையை திரும்பப் பெறக் கோரி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, 2020-ஆம் ஆண்டு, பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 35 நாள்களுக்கும் மேலாக பல்கலைக்கழக மாணவா் பேரவை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஈடுபட்டவா்களில் 11 மாணவா்களுக்கு 5 ஆண்டுகள் தடையும், ரூ.10,000 அபராதமும் விதித்து பல்கலைக்கழக நிா்வாகம் தற்போது உத்தரவிட்டது.
இதைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கம் சாா்பில், பல்கலைக்கழகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பிரதேச தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலா் பிரவீன் குமாா், துணைச் செயலா் சச்சின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.