புதுவையில் வட்டாட்சியா் மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
புதுச்சேரி அருகே மங்கலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், இந்தத் திட்டத்தை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் வில்லியனூா் வட்டாட்சியா் காா்த்திகேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
புதுவை மாநிலத்தில் நீதிமன்றங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, வருவாய்த் துறை மூலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.