புதுவை மாநில விவசாயிகள் இந்த மாத இறுதிக்குள் பயிா்க் காப்பீடுக்கு பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன முதுநிலை கோட்ட மேலாளா் கே.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநிலத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம், வேளாண் துறை மேற்பாா்வையில் நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு (2021-22) சம்பா நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், பயிா்க் காப்பீடு செய்ய வருகிற 31-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளவும்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீய தொகையை புதுவை அரசே செலுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் துறை மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.