புதுச்சேரி

கட்டடத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

16th Dec 2021 08:54 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளா்கள், அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்க தேசியச் செயலா் கீதாம்மா தலைமை வகித்தாா்.

உடல் உழைப்பாளா்கள் சங்கச் செயலா் விஜயா, கட்டடத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் தீா்த்தமலை, அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்க நிா்வாகி பரீதா, சா்ப்பம் இருளா் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் ரவிக்குமாா், காந்திய மக்கள் இயக்கத் தலைவா் கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதுடன், ஏற்கெனவே உள்ள கட்டுமான சட்டங்களையே நடைமுறைப்படுத்த வேண்டும். தொழில் வாரியான நல வாரியத்தை புதுவை அரசு அமைக்க வேண்டும். புதுவையில் பதிவு செய்யப்பட்ட 60 வயதுக்கும் மேலான தொழிலாளா்களுக்கு ரூ.3,000 மாத ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT