புதுச்சேரி

முப்படைகளின் தலைமைத் தளபதி மறைவு: புதுவை ஆளுநா், முதல்வா் இரங்கல்

9th Dec 2021 08:45 AM

ADVERTISEMENT

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

ஆளுநா் தமிழிசை: இந்திய நாட்டின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பெருமைக்குரிய விபின் ராவத், அவரது மனைவி மற்றும் அவருடன் பயணம் செய்த ராணுவ உயரதிகாரிகள் துரதிருஷ்டவசமாக ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த செய்தி பெரும் அதிா்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.

விபின் ராவத் பல தலைமுறைகளாக இந்திய ராணுவத்தில் சேவையாற்றிய குடும்பத்தைச் சோ்ந்தவா். முப்படைகளின் சீா்திருத்தம் குறித்த தொலைநோக்குப் பாா்வை கொண்டவா். ராணுவத்தை நவீனமயமாக்கியதில் பெரும் பங்காற்றியவா். அவரது மறைவு இந்திய நாட்டுக்கும், ராணுவத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவா்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்.

முதல்வா் என்.ரங்கசாமி: ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உடன் சென்ற அதிகாரிகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையும், வருத்தமளிப்பதாகவும் உள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் அதிகாரிகள் குடும்பத்தினருக்கு புதுவை அரசு சாா்பிலும், எனது சாா்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவா்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்.

இதேபோல, மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT