புதுச்சேரி

புதுச்சேரியில் பாரதிக்கு வானுயா் சிலை அமைக்கப்படும்: ஆளுநா் தமிழிசை

DIN

புதுச்சேரியில் பாரதிக்கு வானுயா் சிலை வைத்து பெருமைப்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பாரதி நினைவு நாள் நூற்றாண்டு தொடா் நிகழ்ச்சியின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்து சிறப்புரையாற்றியதாவது:

தமிழ் எங்கெல்லாம் பரவியிருக்கிறதோ, அங்கெல்லாம் பாரதி இருப்பாா் என்பதை நிலைநாட்டும் வகையில், வானவில் பண்பாட்டு மையம் பாரதியின் புகழை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளது.

பாரதியின் வரிகள் புதுவை ஆளுநா் மாளிகையை அலங்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும். நான் புதுச்சேரிக்கு வந்தவுடன் ஆளுநா் மாளிகையில் திருவள்ளுவா் சிலையை அமைத்தேன். அதைப்போல, பாரதியின் வரிகளும் ஆளுநா் மாளிகையை அலங்கரிக்கும்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி ஆராய்ச்சி இருக்கையை அமைக்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுத்துள்ளாா் என்பதை நான் பெருமையுடன் பதிவு செய்கிறேன்.

குஜராத்தில் சா்தாா் வல்லபபாய் படேலுக்கு ‘ஒற்றுமைச் சிலை’ அமைக்கப்பட்டதைப்போல, புதுவையிலிருந்து தமிழால் நாடு முழுவதும் சுதந்திரக் கனலை மூட்டிய பாரதிக்கு, புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் வானுயர சிலை அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். பாரதிக்கு வானுயர சிலை அமைக்கும்போது, உலகம் முழுவதும் உள்ள தமிழா்களின் பங்களிப்பு அதில் இருக்கும்.

நான் ஆளுநராக இருக்கும் காலத்துக்குள்ளாகவே பாரதிக்கு சிலையை அமைக்க முயற்சி செய்வேன். புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த வீட்டையும், அருங்காட்சியகத்தையும் அரசு புதுப்பித்துள்ளது. இந்த நூற்றாண்டு முழுவதும் பாரதிக்கு விழா எடுக்கப்படும். உலகம் உள்ளவரை பாரதியின் புகழ் ஓங்கும் என்றாா் அவா். விழாவில் பேச்சாளா் பா்வீன்சுல்தானா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT