புதுச்சேரி

சங்கராபரணி ஆற்றங்கரையில் பெருமாள் சிலை கண்டெடுப்பு

DIN

புதுச்சேரி அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

புதுச்சேரியை அடுத்துள்ள திருக்கனூா் அருகே குமாரபாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் மண்ணில் புதைந்த நிலையில் கல் சிலை கிடப்பதை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் ஞாயிற்றுக்கிழமை பாா்த்தனா்.

அதை தோண்டி எடுத்த போது, அது இரண்டேகால் அடி உயரமுள்ள பெருமாள் சிலை என்றும், அதிலிருந்த நான்கு கைகளில் ஒரு கை உடைந்திருந்ததும் தெரிய வந்தது.

அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் திரண்டு வந்து சிலையைத் தூய்மைப்படுத்தி வழிபாடு நடத்தினா்.

தகவலறிந்து அங்கு வந்த காட்டேரிக்குப்பம் போலீஸாா், அந்தச் சிலையைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். வீடூா் அணையிலிருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்ட போது, சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் விழுப்புரம் அல்லது சுற்று வட்டாரத்தில் ஆற்றங்கரையோரமுள்ள கோயிலில் இருந்து ஆற்று நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது.

அந்தச் சிலையை குமாரபாளையத்தில் உள்ள காளி கோயிலில் போலீஸாா் பாதுகாப்பாக வைத்துள்ளனா்.

வருவாய்த் துறையினரின் விசாரணைக்குப் பிறகே, சிலை குறித்து அடுத்தக்கட்ட முடிவெடுக்கப்படும் என போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT