புதுச்சேரி

புதுச்சேரி அமுதசுரபி அங்காடியை முற்றுகையிட்டு கட்டுமானத் தொழிலாளா்கள் போராட்டம்

4th Dec 2021 12:42 AM

ADVERTISEMENT

தீபாவளி பரிசு கூப்பன்களுக்கான பொருள்களை வழங்கக் கோரி, புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி அங்காடியை கட்டுமானத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.3,000, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான பரிசு கூப்பன்களை புதுவை அரசு வழங்கியது. மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி அங்காடியில் பரிசு கூப்பன்களுக்கான பொருள்களை தொழிலாளா்கள் வாங்கிச் செல்கின்றனா். அங்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், தொழிலாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

காந்தி வீதியுள்ள அமுதசுரபி அங்காடியில் பரிசு கூப்பன்களுக்கான பொருள்களை வாங்க தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை குவிந்தனா். ஒரே நேரத்தில் ஏராளமானோா் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்ததால், அங்கிருந்த கண்ணாடி கதவு உடைந்ததில் இருவா் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து அங்கு வந்த சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் கலியன் தலைமையில் தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தீபாவளி பரிசு கூப்பன்கள் வழங்க அமைக்கப்பட்ட 8 மையங்களிலும் அமுதசுரபி அங்காடிகளைத் திறந்து பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமுதசுரபியின் அனைத்துக் கிளைகளிலும் போதிய அளவில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

அவா்களிடம் பேச்சு நடத்திய அதிகாரிகள், இதுதொடா்பாக தலைமைச் செயலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். பின்னா், போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT