புதுச்சேரி

புதுவை சிறையில் கைப்பேசி, பீடி கட்டுகள்பறிமுதல்: 5 கைதிகள் மீது வழக்கு

4th Dec 2021 11:01 PM

ADVERTISEMENT

புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் கைப்பேசி, பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக, 5 கைதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை, தண்டனைக் கைதிகள் 290 போ் வரை அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் விசாரணைக் கைதிகள் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

இந்த வகையில், நவ.30-ஆம் தேதி நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பிய 24 கைதிகளை மீண்டும் சிறைக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அங்குள்ள நுழைவு சோதனைச்சாவடியில் சிறைத் துறையினா் பரிசோதித்தனா். அப்போது, கைதிகள் இருவா் தங்களது கைகளில் வைத்திருந்த இரண்டு பொட்டலங்களை தூக்கி வீசி பரிமாற்றம் செய்துள்ளனா்.

இதையடுத்து, கைதிகளிடமிருந்த இரு பொட்டலங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, சிறைத் துறை துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கரன் முன்னிலையில் பிரித்துப் பாா்த்தபோது, அவற்றில் 2 கைப்பேசிகளும், பீடி கட்டுகளும் இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து விசாரித்தபோது, அங்கு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள அய்யனாா், அவரது கூட்டாளிகளான பசுபதி, பிரதீஷ், ராஜ்குமாா், சிவா ஆகியோா் கைப்பேசிகள், பீடி கட்டுகளை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரி அளித்த புகாரின்பேரில், கைதி அய்யனாா் உள்ளிட்ட 5 போ் மீதும் காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT