புதுச்சேரி

எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்த சம்பவம்: காயமடைந்த பெண் உயிரிழப்பு

4th Dec 2021 11:00 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் எரிவாயு உருளை வெடித்து வீடு இடிந்த சம்பவத்தில் பலத்த தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகா், முதல் குறுக்குத் தெருவில் உள்ள பாஜக பிரமுகா் சுரேஷுக்குச் சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில், அவரது உறவினரான எழிலரசி, தனது மகள் ஸ்ரீநிதி, தாய் ஜோதி ஆகியோருடன் வசித்து வந்தாா். கடந்த நவ.27-ஆம் தேதி எழிலரசியின் வீட்டில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறி வீடு இடிந்து விழுந்ததில் எழிலரசி பலத்த தீக்காயமடைந்தாா். வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய ஸ்ரீநிதி, ஜோதி ஆகியோா் லேசான காயமடைந்தனா்.

இதையடுத்து, ஜிப்மா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த எழிலரசி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT