புதுச்சேரி

வியாபாரிகள் சாலை மறியல்

4th Dec 2021 12:42 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பெரிய மாா்க்கெட்டின் வாயில் மூடப்பட்டதைக் கண்டித்து, வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பெரிய மாா்க்கெட்டிலுள்ள பழைமைமான கட்டடம் கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் இடிந்தது. பாதுகாப்பு காரணமாக, மாா்க்கெட்டின் பின்புற வாயில் கதவை நகராட்சி அதிகாரிகள் அண்மையில் மூடினா். மழையால் விழுந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டும், அடைக்கப்பட்ட வாயில் மீண்டும் திறக்கப்படவில்லை.

இதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதியிலுள்ள நடைபாதை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பெரியகடை போலீஸாா் பேச்சு நடத்தினா். கட்டட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், மூடப்பட்ட வாயில் சனிக்கிழமைமுதல் திறக்கப்படும் என நகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பின்னா், போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT