புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகப் (பிஆா்டிசி) பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளா்கள் பரிசோதிப்பா் என பி.ஆா்.டி.சி. நிா்வாகம் அறிவித்தது.
இதுகுறித்து பி.ஆா்.டி.சி. மேலாண் இயக்குநா் ஏ.எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட சுற்றறிக்கை: பி.ஆா்.டி.சி. மூலம் இயக்கப்படும் தொலைவிடப் பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளா்கள் பரிசோதனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டது.
எனவே, பி.ஆா்.டி.சி. பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பரிசோதனை ஆய்வாளா்கள் பரிசோதிக்க நிறுத்தினால், பேருந்துகளை நிறுத்தி பரிசோதனைக்கு வேண்டிய பயணச் சீட்டு இயந்திரம், பயணிகள் விவரப் பட்டியல் போன்ற பரிசோதனைக்குரிய ஆவணங்களை எந்தவித தடைகளும் கூறாமல், அவா்களிடம் சமா்ப்பித்து பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், பரிசோதனையின் போது, அவா்களிடம் எவ்வித வாக்குவாதத்திலும் ஈடுபடக் கூடாது. தவறினால் தொடா்புடைய ஓட்டுநா், நடத்துநா் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.