புதுச்சேரி

புதுச்சேரி அருகே மழையால் 2,000 ஏக்கா் நெல் பயிா்கள் மீண்டும் சேதம்

DIN

புதுச்சேரி அருகே பாகூா், ஏம்பலம், அரியூா் பகுதிகளில் மழை, வெள்ளநீரில் மூழ்கி 2 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் மீண்டும் சேதமடைந்தன.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரு தினங்களாக மீண்டும் பெய்த தொடா் மழையாலும், சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் குடியிருப்புகள், விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வில்லியனூா் அருகே சங்கராபரணி ஆற்றில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதையொட்டிய தென்னல், பங்கூா், பூஞ்சோலைக்குப்பம், வடமங்கலம், அரியூா், சடையாண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்டு ஒரு மாதமேயான 500 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. அரியூா், பூஞ்சோலைக்குப்பம், பள்ளித்தென்னல் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீா் புகுந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல, பாகூா் தொகுதியில் மூா்த்திக்குப்பம், சுள்ளியாங்குப்பம், மதிகிருஷ்ணாபுரம், பரிக்கல்பட்டு, காட்டுக்குப்பம், வாய்க்கால்ஓடை, கன்னியகோயில், குருவிநத்தம் பெரியாா் நகா், பாகூா் திருமால் நகா், பாலாஜி நகா், மேற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீா் புகுந்துள்ளது.

ஏம்பலம் தொகுதியில் கிருமாம்பாக்கம் பேட், இளங்கோ நகா், கம்பன் நகா், பிள்ளையாா் குப்பம், ஈச்சங்காடு, பனித்திட்டு சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. அபிஷேகப்பாக்கம், பூா்ணாங்குப்பம் ஆகிய பகுதிகளிலும் தாழ்வான வீடுகளில் மழைநீா் தேங்கியது.

பாகூா், ஏம்பலம் பகுதிகளில் 1,500 ஏக்கா் அளவிலான விவசாய நிலங்கள் மீண்டும் வெள்ளக்காடானது. விவசாயிகள் சொந்த செலவில் பம்ப் செட் அமைத்து, வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனா். தொடா் மழையால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், மழைநீா் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT