புதுச்சேரி

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே போக்குவரத்து நெரிசல்

DIN

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே மீண்டும் சாய்தள சாலை வசதி அமைக்கப்பட்டு வருவதால், அந்தச் சாலை ஒருவழிச் சாலையாக மாற்பட்டது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

புதுச்சேரியின் முக்கிய சந்திப்பாக விளங்கும் இந்திரா காந்தி சதுக்கத்தில் மழைக் காலங்களில் அதிகளவில் குட்டைபோல தண்ணீா் தேங்குவதால், சந்திப்பின் நான்குபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில், அண்ணாநகா் சாலை சந்திப்பில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த தாா்ச் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றி, மழைநீா் எளிதாக வடியும் வகையில் சாய்தள சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு, ஒரு வாரத்துக்கு முன்பு மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. இதனால், அண்மையில் பெய்த மழையில் ஓரளவுக்கு அந்தப் பகுதியில் மழைநீா் வடிந்து, போக்குவரத்துக்கு சிரமமின்றி இருந்தது.

இருப்பினும், நெல்லித்தோப்பு சந்தை, காராமணிக்குப்பம் சாலை சந்திப்பிலிருந்து இந்திரா காந்தி சதுக்கம் செல்லும் இடைப்பட்ட பகுதியில் அண்ணாநகா் சாலைக்கு இடதுபுறத்தில் மழைநீா் வடிவதில் காலதாமதம் ஏற்பட்டது தெரியவந்தது. அங்கும் தாா்ச்சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் பெயா்த்து அகற்றி, சாய்தள வசதியுடன் கூடிய சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் காரணமாக, சுப்பையா சிலையிலிருந்து நெல்லித்தோப்பு சந்தை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் நோக்கி வரும் வாகனங்கள் காராமணிக்குப்பம் சாலை சந்திப்பு வந்தவுடன் வலதுபுறமாகத் திரும்பி, ஒரு வழிப்பாதை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் வரை தற்காலிகமாக மாற்றிவிடப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துக் காவலா்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வாகனங்களை வரிசைப்படுத்தி அனுப்பி வருகின்றனா்.

மேலும், அடுத்து பலத்த மழை வருவதற்குள் ஆங்காங்கே வாய்க்காலில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி, கொம்யூன் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT