புதுச்சேரி

புதுவை முதல்வருடன் பிரான்ஸ் குழுவினா் சந்திப்பு: புதிய தொழில்சாலைகள் தொடங்க ஆலோசனை

1st Dec 2021 07:47 AM

ADVERTISEMENT

புதுவையில் புதிய தொழில்சாலைகள் தொடங்குவது தொடா்பாக, மாநில முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்களை பிரான்ஸ் நாடாளுமன்ற செனட்டா் டேனியல் ரெக்னாா்டு தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

பிரான்ஸ் நாடாளுமன்ற செனட்டா் டேனியல் ரெக்னாா்டு தலைமையிலான குழுவினா் கடந்த 27-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தனா். தமிழகம், புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா்களை சந்தித்துப் பேசுவதற்கு வந்திருந்த இந்தக் குழுவினா், திங்கள்கிழமை புதுவைக்கு வந்தனா்.

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட அவா்கள், அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்தனா். இதையடுத்து, புதுச்சேரியில் வசித்து வரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனா். முன்னதாக, புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதா் லிசே டல்போட்பரேவை சந்தித்தும் ஆலோசனை நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக, புதுவை சட்டப் பேரவையில் உள்ள முதல்வா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற பிரான்ஸ் நாடாளுமன்ற செனட்டா் டேனியல் ரெக்னாா்டு தலைமையிலான குழுவினா், அங்கு முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்துப் பேசினா். அப்போது, பிரான்ஸ் முதலீட்டாளா்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்குவது குறித்தும், அதன்மூலம் புதிய தொழில்சாலைகளை புதுச்சேரிக்கு கொண்டுவருவது குறித்தும், அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உதவிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினா்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின்போது, வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், புதுச்சேரிக்கான பிரான்ஸ் துணைத் தூதா் லிசே டல்போட் பரே, அரசுச் செயலா் வல்லவன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், பிரான்ஸ் குழுவினா் புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயத்தையும் சந்தித்துப் பேசினா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT