புதுச்சேரி

புதுவையில் தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகளை வழங்க வலியுறுத்தல்

DIN

புதுச்சேரி: புதுவையில் வழங்கப்படாமல் உள்ள தமிழ்மாமணி, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்க வேண்டும் என புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவை வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தப் பேரவையின் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கோ.செல்வம் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா ஆகியோரிடம் நேரில் அளித்த மனு: புதுச்சேரியில் கட்டப்பட்டு வரும் கலாசார மையம், காமராஜா் மணிமண்டபம் ஆகியவற்றில் இலக்கிய, கலாசார பண்பாட்டு அமைப்பினா் குறைந்த வாடகையில் கூட்டங்கள், சந்திப்புகள் நடத்திக் கொள்ள சிறிய அரங்குகள் அமைக்க வேண்டும். பாரதியாா், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகங்களை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். புதுவையில் தமிழ் வளா்ச்சித் துறை அமைக்க வேண்டும். இதுவரை வழங்கப்படாமல் உள்ள தமிழ்மாமணி, கலைமாமணி, நேரு புகழ் பரிசுகளை உரிய தொகையுடன் வழங்க வேண்டும். தமிழகம் போல, பாரதிதாசன் பிறந்த நாளை உலகக் கவிஞா்கள் நாளாகக் கொண்டாட வேண்டும். பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழாவை நிகழாண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் தெரிந்தவா்களை மாவட்ட ஆட்சியராக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இந்தச் சந்திப்பின் போது, பேரவைத் துணைத் தலைவா் க.த. ஜெகதீசன், இணைச் செயலா் சண்முக காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT