புதுச்சேரி

புதுவையில் நிலப்பட்டா ஆவணங்களை செல்பேசி, இணைய வழியில் பெறும் திட்டம் தொடக்கம்

2nd Aug 2021 12:35 PM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் நிலவரி திட்ட நகல், பட்டா நகல் உள்ளிட்டவை எளிமையாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில், இணையதள முகவரியை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 

புதுச்சேரியில் நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககம் சார்பில், பொது சேவை மையங்கள் மூலம் நிலவரித் திட்ட நகல், பட்டா நகல், புலப்பட நகல் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இதையும் படிக்கலாமே | தில்லியிலும் நிலைமை மாறுகிறது.. புதிதாக 85 பேருக்கு கரோனா

இதனை மேலும் எளிமையாக்கி www.nilqmagal.py.gov.in என்கிற இணையதளம் மூலம், பொதுமக்கள் எந்நேரத்திலும் பார்வையிடும் வகையில், இணையவழி மூலமாகவோ, அலைபேசி மூலமாகவோ 50 ரூபாய் கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் எளிமையாக பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கான இணையதள முகவரி துவக்கம்  செய்யப்பட்டது.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோர் இணையதளத்தை தொடங்கி வைத்தனர்.

Tags : pondicherry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT