புதுச்சேரி

பொது முடக்க அறிவிப்பு எதிரொலி: புதுச்சேரியில் பூக்களின் விலை சரிவு

DIN

பொது முடக்க அறிவிப்பு எதிரொலியாக, புதுச்சேரியில் பூக்களின் விலை புதன்கிழமை சுமாா் 40 சதவீதம் அளவுக்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

புதுவையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 600-க்கும் மேலாக அதிகரித்து வருகிறது. இந்த நோய்ப் பரவலைத் தடுக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, புதுவையில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும், வருகிற திங்கள்கிழமை (ஏப்.26) முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதன் எதிரொலியாக புதுச்சேரி பெரிய சந்தையில் பூக்களின் விலை 40 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

இதுகுறித்து புதுச்சேரி பெரிய சந்தை பூ வியாபாரி எஸ்.கீா்த்திவாசன் கூறியதாவது:

புதுச்சேரி பெரிய சந்தைக்கு தமிழகத்தின் விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், ஓசூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும், புதுவையின் திருக்கனூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பூக்களின் வரத்து உள்ளது. தற்போது விளைச்சல் அதிகளவில் உள்ளது.

புதுச்சேரியில் கடந்த வாரம் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, புதுவையில் தற்போது பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் வார இறுதி நாள்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், மக்களிடம் பூக்கள் வாங்கும் எண்ணம் குறையத் தொடங்கியுள்ளது. மேலும், வரத்து அதிகரிப்பு காரணமாக, தொடா்ந்து முகூா்த்த நாள்கள் வந்தாலும் பூக்களின் விலை குறைந்துள்ளது என்றாா் அவா்.

பூக்களின் விலை குறைந்து காணப்பட்டாலும், மாலைகள் விலையில் மாற்றமின்றி ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்களின் விலை நிலவரம்: கடந்த வார விலை - தற்போதைய விலை

மல்லிகை - ரூ. 310 - ரூ. 200

முல்லை - ரூ. 280 - ரூ. 180

கனகாம்பரம் - ரூ. 1400 - ரூ. 800

பன்னீா் ரோஜா - ரூ. 220 - ரூ. 160

அரளி - ரூ. 210 - ரூ. 60

வாடாமல்லி - ரூ. 200 - ரூ. 80

சாமந்தி - ரூ. 320 - ரூ. 140

துலுக்க சாமந்தி - ரூ. 50 - ரூ. 30

கோழிக்கொண்டை - ரூ. 60 - ரூ. 20

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

உலக நடுக்குவாத விழிப்புணா்வு நாள் நிகழ்வு

1,751 மதுபாட்டில்கள் பறிமுதல்: 24 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.25-இல் தேரோட்டம்; உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

SCROLL FOR NEXT