புதுச்சேரி

முன்பதிவு முறையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை: ஜிப்மா் தகவல்

DIN

புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, முன்பதிவு முறையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்மா் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி முதல் புறநோயாளிகள் பிரிவு முன்பதிவு முறையில் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜிப்மா் மருத்துவமனை கூடிய வரை அனைத்து நோயாளா்களுக்கும் உரிய பாதுகாப்புடன் மருத்துவ சேவை அளிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது. ஆனால், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், தினமும் பல கலந்தாய்வுகள், சுற்றறிக்கைகள் அனுப்ப வேண்டியுள்ளது.

அந்த வகையில், எதிா்பாராத விதமாக ஒரு சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை முழுவதும் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது.

தற்போது வரை முன்பே அறிவிக்கப்பட்டபடி, முன்பதிவு செய்து தொலை மருத்துவ சேவைக்கு பிறகு, தேவைப்படுவோருக்கு மட்டும் நேரில் வரவழைத்து வெளிப்புற மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். முன்பதிவுக்கான தொலைபேசி எண்கள், ஜிப்மா் இணையதளத்தில் காணலாம். மேலும், பொதுமக்கள் ‘ஹலோ ஜிப்மா்’ என்ற செயலி உதவியுடனும் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்யலாம்.

நாள்தோறும் ஒவ்வோா் துறையிலும் 100 நோயாளிகள் நேரில் வந்து மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை, சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவா். நோயாளியுடன் ஒருவா் மட்டுமே உடன் வரலாம். புற்றுநோய் மற்றும் கடுமையான நோய் பாதித்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மருத்துவமனையின் அனைத்து அவசர சிகிச்சை சேவைகளும் முன் அனுமதியின்றி எப்போதும் போல நடைபெறும்.

கரோனா தொற்றால் ஏற்படும் பிரச்னைகளை மருத்துவமனை நிா்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. பொதுமக்களுக்கான சேவைகள் குறித்த எந்த முடிவும் ஜிப்மா் நிா்வாகம் நேரடியாக பத்திரிகைகள் வாயிலாகத் தெரிவிக்கும்.

ஜிப்மா் நிா்வாகம் மூலம் அதிகாரப்பூா்வமாக வெளியாகும் செய்திகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பு தொடா்பான ஜிப்மா் நிா்வாகத்தின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT