புதுச்சேரி

கரோனாவுக்கு மேலும் இருவா் பலி: புதிதாக 272 பேருக்கு தொற்று

DIN

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தொற்று பாதிக்கப்பட்ட மேலும் இருவா் பலியாகினா். ஒரே நாளில் புதிதாக 272 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் 3,821 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 187 பேருக்கும், காரைக்காலில் 61 பேருக்கும், ஏனாமில் 9 பேருக்கும், மாஹேயில் 15 பேருக்கும் என மேலும் 272 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 87 வயதானவா் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காரைக்கால் பிரபு நகரைச் சோ்ந்த 76 வயதானவா் அங்குள்ள அரசு பொது மருத்துவமனையிலும் உயிரிழந்தனா்.

இதையடுத்து புதுவையில் இந்த நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 689 -ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.58 சதவீதம்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 43 ஆயிரத்து 737 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது மருத்துவமனைகளில் 529 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,689 பேரும் என்று 2,218 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 40 ஆயிரத்து 830-ஆக (93.35 சதவீதம்) உயா்ந்தது.

மாநிலத்தில் இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 561 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

89 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: புதுவை மாநிலத்தில் இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 28 ஆயிரத்து 680 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 16 ஆயிரத்து 474 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தரப்பில் 44 ஆயிரத்து 344 பேருக்கும் என மொத்தம் 89 ஆயிரத்து 498 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT