புதுச்சேரி

புதுவையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: என்.ரங்கசாமி

7th Apr 2021 09:01 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த என்.ரங்கசாமி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, நான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதி மற்றும் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கும் சென்று வந்தேன். விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

முன்னாள் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு சொல்லும்படியாக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதை மக்களிடம் நாங்கள் தெளிவுபடுத்தினோம். மக்களும் அதை நன்கு அறிந்துள்ளனா்.

ADVERTISEMENT

தற்போதைய தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். நான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT